75+ Tamil Pongal Kavithai SMS Collections "PONGAL" Valthugal...

உலகெங்கும் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் பண்டிகை. ஒவ்வொரு வருடமும், தமிழ் மாதமான தை மாதம் பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழவர்கள், மாடு, பொங்கல், புத்தாடை, கரும்பு, இனிப்பு மற்றும் வாழ்த்து செய்திகள். அனைத்து மக்களும் நண்பர் மற்றும் உறவினர்களுடன், வாழ்த்துக்களையும் பொங்கலையும் பரிமாறிக்கொள்வர். 

இந்த நன்னாளை கொண்டாட வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் வசிப்பவர்கள்  அனைவரும் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

இந்த வருட பொங்கல் பண்டிகையில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.

இந்நன்னாளில் இயற்கை அன்னைக்கும், உயிரினங்கள் எவற்றிற்கும் இடையூறு செய்யாமல், கார்பன் புகை எழுப்பாமல், தெருவைக் குப்பை மேடாக்காமல் இயற்கையைப் பேணும் வண்ணம் இனிதாக கொண்டாடுங்கள்.

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் வரிசையாக கொண்டாடப்படும்:

1.போகி பொங்கல்  
2.தைப்பொங்கல்
3.மாட்டுப்பொங்கல்
4.காணும் பொங்கல்

இந்த பதிவு “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை” உள்ளடக்கியுள்ளது.


"பொங்கல்" வாழ்த்துகள்..!

பொங்கிவரும் பொங்கலிது..!

எனக்கு மட்டும் சொல்வாயா..!

ஜல்லிக்கட்டு பொங்கல் கவிதை

MAY DINA KAVITHAI..!!



"பொங்கல்" வாழ்த்துகள்..!


"PONGAL"  Valthugal in Tamil
"PONGAL"  Valthugal in Tamil

அன்பார்ந்த Aircel, Airtel
நெஞ்சங்களே! நண்பர்களே!

டவர் இல்லாமல்
தவிக்கும் Idea
தோழர்களே! தோழிகளே!

கிராஸ் talk'இல் சிக்கி
தவிக்கும் Vodofone
நண்பர்களே! நண்பிகளே!

மற்றும் சிக்னல் இல்லாமல்
'Water Tank' மேல ஏறும் Bsnl
தோழர்களே! தோழிகளே!

என் உயிரினும் மேலான
Nokia மொபைல் ரசிகர்களே!

சீனா மொபைல் வைத்து 'சீன்'
போடும் மக்களே!

SMSக்கு wait பண்ணும் ரசிக
பெருமக்களே!


உங்களுக்கும் மற்றும்
உங்கள் குடும்பத்தாருக்கும்
"பொங்கல்" வாழ்த்துகள்..!

பொங்கிவரும் பொங்கலிது..!

Pongal Valthu Tamil Kavithai
Pongal Valthu Tamil Kavithai


வாசலிலே வண்ண கோலமிட்டு
புத்தாடை அதை உடுத்தி
பூவையர் கூந்தலில் பூ மணக்க
மஞ்சள் கொத்தெடுத்து 
மாவிலை தோரணங்கட்டி
இஞ்சித் தண்டெடுத்து
எறும்பாடும் கரும்பெடுத்து
வட்டப் புதுப்பானை- அகல 
வாயெல்லாம் பால்பொங்க
வீடெல்லாம் குதுகுலமாய்
இனிய பொங்கசோறு 
பொங்கிவரும் பொங்கலிது..!

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

எனக்கு மட்டும் சொல்வாயா..!

Pongal valthu Kavithai
Pongal valthu Kavithai

நீ வைக்கும் பொங்கல்
நீ போடும் கோலம்
நீ உடுத்தும் உடை
நீ நடக்கும் நடை 
நீ சுவைக்கும் கரும்பு
நீ சமைக்கும் உணவு 
நீ சூடும் பூக்கள்
நீ பாடும் பாக்கள்
நீ பார்ககும் பார்வை
இவை எல்லாமே 
அழகாகவும் 
பிரமிப்பாகவும்
இப்படி எப்படி 
என்கிற ரகசியத்தை 
எனக்கு மட்டும் சொல்வாயா 
பெண்ணே..!

ஜல்லிக்கட்டு பொங்கல் கவிதை

Jallikaddu Pongal Kavithai
Jallikaddu Pongal Kavithai

விடியற்காலை கண் விழித்து 
வாசலிலே கோலம் போட்டு 
புத்தாடை உடுத்தி 
கோவிலிலே பூஜையை முடித்து 
பொங்கல் வைத்து சமைத்து 
கரும்பை உண்டு ருசித்து 
ஜல்லிக்கட்டு விளையாடடை 
பார்த்து ரசித்து 
சந்தோசமாய் பொங்கலை 
கொண்டாட வாழ்த்துகின்றோம்..! 


MAY DINA KAVITHAI..!!

உலகின் படைப்புகளெல்லாம்
உழைப்பின் சிதறல்கள்..!
மண்ணின் ஈரங்களில்
மனிதனின் வியர்வை துளியும் சில உண்டு..!
கடலின் நீலங்களில்
மக்களின் கண்ணீர் துளிகள் பல உண்டு..!
இந்த உலகத்திலிருந்து
உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால்,
உழைப்பாளிகளை மதிப்போம்..!
உலகை காப்போம்..! 

Post a Comment

0 Comments