யாராக இருந்தாலும் எந்த மனிதராக இருந்தாலும் தன வாழ்க்கையில் சில சமயங்களில் தன்னம்பிக்கை இழக்க கூடும், அந்த தருணங்களில் நமக்கு தன்னம்பிக்கை கொடுக்க நண்பரோ, மனைவியோ, பிள்ளைகளோ, ஆசிரியரோ யாரவது நம்மை கைபிடித்து தன்னம்பிக்கை கொடுத்தால் நம் வாழ்க்கை புத்துணச்சி பெற்று புது பொலிவுடன் முன்னோக்கி பயணம் செய்ய உதவும். நாம் நம் தன்னம்பிக்கை கவிதைகள் மூலம் நம்மால் இயன்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறோம்.
இந்த பதிவு “தன்னம்பிக்கை கவிதை” உள்ளடக்கியுள்ளது.
வெற்றி நிச்சயம்..!
Super Words
முயற்சி செய்..!
ஆசையே வராது..!
நேசிப்போம்..!
தன்னம்பிக்கை
நிமிர்ந்து நின்று பார்ப்பாய்..!
உன் வாழ்க்கை..!
Be Confident..............!
தன்னம்பிக்கை
மலை போல எழு..!
காதல் திருமணம் vs நிச்சயித்த திருமணம்
குழந்தை பிறந்த உற்சாகத்தில்..!
ஒரு யானை குட்டியின் கண்ணீர்..!
வெற்றி நிச்சயம்..!
"Success Will Follow You" |
முயற்சி செய்யாமல்
சோம்பேறியாக
இருப்பவனை விட,
முயற்சி செய்து
தோல்வி அடைபவன்
ஆயிரம் மடங்கு மேல்,
கண்டிப்பாக,
அவனுக்கு வெற்றி நிச்சயம்..!
Super Words
முடியும் என்றால்
முயற்சி செய்...
முடியாது என்றால்
பயிற்சி செய்...
"Suceess Will Follow You"
முயற்சி செய்..!
முடியும் வரை முயற்சி செய்..!
முடியாது போனால் பயிற்சி செய்..!
"Suceess Will Follow You"
ஆசையே வராது..!
ஒருவன் அடைந்ததை
கண்டு பொறாமை படாதீர்கள்..!
அவன் இழந்ததை
தெரிந்தால் அதை
அடைய வேண்டுமென்கிற
ஆசையே வராது
உங்களுக்கு..!
நேசிப்போம்..!
யாருடன் நாம் வாழ்கின்றோமோ
அவர்களை வெறுப்பதை விட,
யார் இல்லாவிட்டால்
வாழ முடியாமல் போகுமோ
அவர்களை அதிகமாக
நேசிப்போம்..!
Don’t Fight With Them…
Don’t Miss Them…
தன்னம்பிக்கை
உதவிக்கு யாரும் இல்லை என்று வருந்தாதே..
உனக்கு துணையாக நன் இருக்கிறேன்..
தைரியமாக போராடு..!
இப்படிக்கு
தன்னம்பிக்கை
நிமிர்ந்து நின்று பார்ப்பாய்..!
தெருவில் கிடைக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே..!
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட நிமிர்ந்து நின்று பார்ப்பாய்..!
உன் வாழ்க்கை..!
படித்த பெண்ணை
திருமணம் செய்வதை விட
பிடித்த பெண்ணை திருமணம்
செய்து கொள்..!
உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..!
Be Confident..............!
இரவு முடியும், காலை விடியும்,
என்று நம்பும் போது, உன்னால் முடியும்
என்றும் நம்பு...!
கண்டிப்பா அந்த Figure
உனக்கு மடியும்....!
Be Confident..............!
மலை போல எழு..!
விதைகள் கீழ் நோக்கி ஏறிய பட்டால் தான்
மரங்கள் மேல் நோக்கி வளரும்..!
விழும் பொது விதை போல விழு
எழும் போது மலை போல எழு..!
தன்னம்பிக்கை
யார் சொன்னது உனக்கு உதவ யாருமில்லை என்று?
நீ மட்டும் பயிற்சி எடுத்து முயற்சி செய்தால்
காலம் முழுவதும் உனக்குள் இருப்பேன்..!
உனக்கு உதவி செய்ய தயாராக இருப்பேன்..!
இப்படிக்கு
தன்னம்பிக்கை
காதல் திருமணம் vs நிச்சயித்த திருமணம்
காதல் திருமணம் vs நிச்சயித்த திருமணம் |
காதல் திருமணத்துக்கும்
நிச்சயித்த திருமணத்துக்கும்
என்ன வித்தியாசம்??
நாமளா போயி
கிணத்துல விழுந்தா
அது காதல் திருமணம்..!
10 பேர் சேர்ந்து தள்ளி விட்டா
அது நிச்சயித்த திருமணம்..!
Newborn baby kavithai |
குழந்தை பிறந்த உற்சாகத்தில்..!
அலுங்காது குலுங்காது,
அரை அடி தூரம் நகராது,
தூங்காது துவளாது,
பொத்தி பொத்தி பொன்போல் பொதிந்த
பத்தரை மாதத்து தங்கம்,
பனிக்குடம் உடைத்து,
படிவாசலில் அடியெடுத்து
அவதாரமாய் அவதரிக்கும் போது,
அன்பு கரத்தால் அரவணைத்து,
முக்கி முனகி,
முடிந்தவரை போராடி,
மூச்செல்லாம் வீணாகி,
பெரும்பாடு பட்டு பெற்றெடுத்த
தன் மாணிக்கத்தை மரதகத்தை,
அவள் கைகளிலே கொடுக்கும்போது,
அவளடையும் ஆனந்தத்தை ,
எந்த ஒரு அளவுகோலாலும் அளவிட முடியாது!!!
கொரனாவின் கொடிய முகத்தையே பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு,
பிஞ்சு குழந்தையின் கொஞ்சும் முகத்தை பார்க்கும்போது,
கொஞ்சம் வாழ்ந்து பார்க்கலாம் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது!!!
ராபின்சன் ராஜாகுமார்
அரசு மருத்துவர்
ஒரு யானை குட்டியின் கண்ணீர்..!
அம்மா அழுகிறாயா ..!
இதுவரை எனக்கு பிடித்த உணவை எல்லாம் வழங்கினாயே ..
இரண்டு நாட்களாய் ஏன் இந்த மயான அமைதி ..
எவ்வளவு தண்ணீரை தான் தின்று தீர்ப்பாய் ..
பைனாப்பிள் வாசனை வந்ததே , அதை ஏன் என் வயிற்றுக்கு கொண்டு வர வில்லை ..
அம்மா ஏன் அழுகிறாய் ..!
இந்த குளத்திலேயே நிற்க்க வேண்டும் என்றும் அப்படி என்ன பிடிவாதம் உனக்கு ..
எங்கோ இரத்த வாடை வருகிறது உன் தும்பிக்கை வழியே நானும் நுகர்கிறேன் ..
அம்மா ஏதாவது வேட்டை விலங்கு நம்மை நெருங்கி வருகிறதா ..
வாயை தான் திறயேன் , அப்படி என்ன தான் கோவம் என் மீது ..
அம்மா பயமாக இருக்கிறது ..!
மனிதர்கள் தான் இருக்கிறார்களே நம்மை அந்த வேட்டை விலங்கிடம் இருந்து காக்க
அம்மா மூச்சி விட சிரமமாக இருக்கிறது..
என்னதான் ஆனது உனக்கு ..
அம்மா வாயை திறயேன் , உள்ளிருக்கும் இருட்டும் , உன் அமைதியும் என்னை கொல்கிறது ..
அம்மா நானும் அழுகிறேன் எனக்கு ஏன் நீ பைனாப்பிள் தரவில்லை ..
மனிதன் என்னும் மிருகம் அழிந்து இயற்கை உலகை கைபற்றட்டும் 🙏
- ஜெகதீஷ் ரவி
0 Comments
உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.