50+ Tamil Diwali Kavithai SMS Collections Diwali kavithai in Tamil..!

உலகெங்கும்  வசிக்கும் இந்திய மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் தீபாவளி பண்டிகை. ஒவ்வொரு வருடமும், தமிழ் மாதமான ஐப்பசி மாதம் அம்மாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு மற்றும் வாழ்த்து செய்திகள். அனைத்து மக்களும் நண்பர் மற்றும் உறவினர்களுடன், வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக்கொள்வர். 

இந்த நன்னாளை கொண்டாட வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் வசிப்பவர்கள்  அனைவரும் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

இந்த வருட தீபாவளி பண்டிகையில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.

இந்நன்னாளில் இயற்கை அன்னைக்கும், உயிரினங்கள் எவற்றிற்கும் இடையூறு செய்யாமல், கார்பன் புகை எழுப்பாமல், தெருவைக் குப்பை மேடாக்காமல் இயற்கையைப் பேணும் வண்ணம் இனிதாக கொண்டாடுங்கள்.


இந்த பதிவு “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதை” உள்ளடக்கியுள்ளது.


இனி விடியட்டும் தீபாவளி!

ஒளிரட்டும் தீபாவளி..! 

எட்டு திக்கும் கேட்கட்டும்..!

ADVANCE HAPPY DIWALI

தீபாவளி நல்வாழ்த்துகள்..! 

தீபாவளி நல்வாழ்த்துகள்..! 


இனி விடியட்டும் தீபாவளி!

Happy Diwali Wishes in Tamil
Happy Diwali..!

அதிரடி பட்டாசு சத்தம்
கலர் கலராய் மத்தாப்பு வெளிச்சம் 
அரக்க பறக்க எண்ணெய் குளியல்
பளபளக்கும் புதுத்துணி
கமகமக்கும்  நறுமண வாசனை
நமது வீடடின் தீப ஒளி 
அடுத்த வீட்டின் நெய் பண்டம்
ஆங்காங்கே வெடி சத்தம்
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத புது பட டிக்கெட்
நிற்காத ரசிகர்கள் சத்தம்
சிரிக்க வைக்கும் பட்டிமன்றம்
அழுக வைக்க நாடகங்கள்
ட்விட்டரில் ஹாஷ்டாக்
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் 
நிற்காத மொபைல் ரிங்க்டோன் 
அவ்வப்போது மெஸேஜ் வாழ்த்து
சளைக்காத நண்பர்கள் கூட்டம்
கலைநிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் 
கொஞ்சம் கோபம் கொஞ்சி போகும்
நிறைய மகிழ்ச்சி நிறைத்து வரும்
எரிந்து போன நரகாசுரன்
எரிச்சல் நீங்க ‘கங்கை குளியல்’
இனி விடியட்டும் தீபாவளி!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


ஒளிரட்டும் தீபாவளி..! 

எட்டுத்திக்கும் எட்டட்டும்
சந்தோச ஒலி சத்தம்
கண்ணை பறிக்கும் மத்தாப்பு வெளிச்சம்
காதை பிளக்கும் வெடி சத்தம்
வாசலெங்கும் வண்ணக்கோலம்
திண்ணையெங்கும் தீபஒளி
வீடுகளில் நெய் பண்டம்
வீதிகளில் வாசனை மணக்கும்
பளபளக்கும் புத்தாடை
குழந்தைகளை அலங்கரிக்கும்
குழப்பம் நிறைந்த மனதிலும்
குதுகுலமாய் ஒளிரட்டும் தீபாவளி..!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!


எட்டு திக்கும் கேட்கட்டும்..!

ஆண்டுதோறும் வரும் தீப ஒளிவெள்ளத்தில்
துன்பம் தொலைவில் போகட்டும்
இன்பம் எளிதில் கிடைக்கட்டும்
வெடிச்சத்தம் எட்டு திக்கும் கேட்கட்டும்
ஒளிவெள்ளம் வானம் வரை எட்டட்டும்
சூழ்ச்சி சூறாவெளியாய் விலகட்டும்
தீமை தீண்டாமல் போகட்டும்
நன்மைகள் பல பெற
கொண்டாடி மகிழ்வோம்
இனிய தீபாவளியை..!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!


ADVANCE HAPPY DIWALI

ஆளாளுக்கு இப்படி பேசாம
இருந்தா எப்படி…???
இன்னும் கொஞ்சம்
நாள் தான் இருக்கு!!!
யாராவது Advance Wishes
ஆரம்பிங்கப்பா…
நானே ஆரம்பிக்கிறேன்

ADVANCE HAPPY DIWALI

தீபாவளி நல்வாழ்த்துகள்..! 

நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டு வருவதற்கான பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை இந்தாண்டு 2022 அக்டோபர் 24 ஆம் தேதி Monday அன்று கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் இயற்கை அன்னைக்கும், உயிரினங்கள் எவற்றிற்கும் இடையூறு செய்யாமல், கந்தகப் புகை எழுப்பாமல், தெருவைக் குப்பை மேடாக்கமல் இயற்கையைப் பேணும் வண்ணம் இனிதாக கொண்டாடுங்கள்.

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன், மனநிறைவும் பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

தீபாவளி நல்வாழ்த்துகள்..! 

அன்பு எங்கும் நிறையட்டும்
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


தீபத்திருநாளில் இருள் நீங்கி
ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


இந்த தீபாவளி திருநாள்
ஒரு இனிய ஆரம்பமாக அமையும்
என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்…
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!


எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால்,
புத்துயிர் பெற்றது தான் இந்த தீபாவளி.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


Post a Comment

0 Comments